Monday, August 16, 2010

அஜித்குமார் நடிக்கும் 50 - வது படம் மங்காத்தா

அசல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் 50 - வது படத்திற்கு “மங்காத்தா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ்ப்படம்,வாரணம்ஆயிரம்,பையா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து விரைவில் வெளிவர இருக்கும் நான் மகான் அல்ல படத்தை தொடர்ந்து கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து வரும் இந்தப் படத்தை சென்னை-600028, சரோஜா, கோவா ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கட்பிரபு இயக்குகிறார்.

அஜித்குமார் தமிழ் சினிமாவுக்குள் வந்த நாளான  ஆகஸ்ட் 2  -ஆம் தேதி ஆடிப்பெருக்கு தினத்தன்று அவர் நடிக்கும் ஐம்பதாவது படமான மங்கத்தா படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம் ராஜேஷ்வரி  திரையரங்கின் படப்பிடிப்பு தளத்தில் பூஜையுடன்  தியேட்டர்களில் திரையிடப்படும்  முன்னோட்டக்  காட்சிக்கான படப்பிடிப்புடன் ஆரம்பமானது.

படத்தைப் பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு கூறியதாவது…

அஜித்குமார் பதினெட்டு வருட சினிமா வாழ்க்கையின் தொடர்ச்சியாக  தனது பத்தொன்பதாவது வருட சினிமா பயணத்தை தொடரும் இந்த நல்ல நாளில் நாங்கள் அவருடைய 50 - வது படமான மங்காத்தா படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளோம்.  முதல் நாளான இன்று தியேட்டரில் பிரத்தியேகமாக திரையிடுவதற் காகவே அஜித்குமார் தோன்றி நடிக்கும் காட்சிகள் இந்தப் படத்தின் ட்ரைலர் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்றது.மிக விரைவில் ரசிகர்கள் இந்த படத்தின் ட்ரைலரை தியேட்டரில் காணலாம்.

மங்காத்தா  படத்தில் அஜித்துடன் நடிக்கும் கதாநாயகிகள் யார்யார்? என்று இன்னும் முடிவாகவில்லை. கதாநாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

படத்தில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவாக இருக்கும் நாகர்ஜுனா நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் பிரேம்ஜிஅமரனுடன் மஹாத் என்ற புதுமுகத்தையும் அறிமுகப்படுத்துகிறேன்.படத்தின் என்பது சதவீத காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன.

இம்மாத இறுதியில் இப்படத்தின்  முழுமையான  படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு  தொடர்ந்து நடைபெற உள்ளது. வருகிற சம்மர் 2011  - ல்  ரசிகர்களுக்கு கோடை விருந்தாக இந்தப்படம் வெளிவர உள்ளது என்றார்.

முன்னதாக படத்தின் துவக்க விழாவில் கிளவுட் நைன்  மூவீஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் விவேக் ரத்னவேல்,கங்கை அமரன்,எஸ்.பி.பி.சரண்,தயாரிப்பாளர் டி.சிவா,தயாரிப்பார்கள் ஏ.வி.எம் குமரன்ஏ.வி.எம் சண்முகம் உட்பட படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஒளிப்பதிவு : சக்திசரவணன்,
படத்தொகுப்பு : பிரவீன்,
இசை : யுவன் ஷங்கர் ராஜா,
சண்டைப்பயிற்சி : செல்வா,
கலை : விதேஷ்,
நிர்வாகத் தயாரிப்பு : கே.சுந்தர்ராஜ்,
தலைமை நிர்வாகி : சுஷாந்த்பிரசாத்,
தயாரிப்பு : தயாநிதிஅழகிரி

No comments:

Post a Comment